சின்ட் மார்டன் என்ற கரீபியன் நாடு, அங்கிருக்கும் வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சின்ட் மார்டன் நாட்டில் வெர்வெட் இனத்தை சேர்ந்த குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அழித்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகார்கள் அளித்தார்கள். அந்த குரங்குகள் தங்களுக்கு அதிக தொல்லைகளை ஏற்படுத்துவதாக பொதுமக்களும் கருதினர். எனவே, சின்ட் மார்டன் அரசாங்கமானது அனைத்து குரங்குகளையும் கொலை செய்ய தீர்மானித்திருக்கிறது.
எனினும், குரங்குகளை கொலை செய்வதற்கு பதில் கருத்தடை செய்வது சிறந்தது என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள் இந்நிலையில் அரசாங்க நிதியுதவியில் தொண்டு நிறுவனத்தின் மூலமாக இன்னும் மூன்று ஆண்டுகளில் 450 க்கும் மேற்பட்ட குரங்குகளை கொலை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது