தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் X  பக்கத்தில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசில்  11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களின் ஊழலை திசை திருப்பவே சனாதனத்துக்கு எதிராக உதயநிதி பேசி வருகிறார் என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.