சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி இந்திராநகர் 6-வது கிராஸ் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருஞானம் நகரில் இருக்கும் சாயப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7- ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாய நீர் நாகராஜ் மீது எதிர்பாராதவிதமாக கொட்டியது.

இதனால் படுகாயமடைந்த நாகராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.