அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி கெத்லின் மெக்கட்ஷென், கடந்த வாரம் தனக்குச் சொந்தமான காரில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் Hit Me Baby One More Time என்ற பாடலை பாடிக்கொண்டே, டிக்டாக் வீடியோ எடுத்து ரசித்தபடியே கார் ஓட்டினார்.
The woman promptly crashes her car, saying, “HIT ME ONE MORE TIME, BABY.” pic.twitter.com/cunFOzngch
— Islamist Cannibal (@Raviagrawal300) September 2, 2025
வீடியோவில் பாடலை பாடிக் கொண்டிருந்த கெத்லின், ஒரு கட்டத்தில் காரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த மோசமான விபத்தில் கெத்லினுக்கு சில லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், அவரது கார் மிகவும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து நேர்ந்ததும், கெத்லின் எடுத்து கொண்டிருந்த டிக்டாக் வீடியோ அதே நேரத்தில் பதிவாகி விட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ‘கார் ஓட்டும் போது டிக்டாக் எடுக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கையாக மாறியுள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
