காஸாவில் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படைகள், சமீபத்தில் 15 மாடிகளைக் கொண்ட கட்டடத்தை ஹமாஸ் பயன்படுத்தியதாகக் கூறி தரைமட்டமாக்கியுள்ளன.

அந்த கட்டடம் இடிக்கப்பட்ட வேளையில் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்குமிங்கும் சிதறியோடி தப்பிய காட்சிகள் வெளிவந்துள்ளன. இதனுடன், காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, காஸா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் 64,368 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களே என்பதுதான் பெருந்துயரமாகும். இதனிடையே, ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.