விளம்பர தொழில்நுட்ப சந்தையில் பயனர்களின் தரவுகளை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, கூகுளுக்கு ரூ.30,000 கோடி அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அபராத முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக நியாயமற்ற வகையில் அபராதம் விதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய நடவடிக்கைகளை ரத்து செய்யாவிட்டால், அமெரிக்கா தக்க பதில் நடவடிக்கைகளை எடுக்கத் தவறாது” என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனால், கூகுளை சுற்றி எழுந்த விவகாரம் சர்வதேச அளவில் அரசியல் மோதலாக மாறியுள்ளது.