இணையத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் எப்போதும் கவனத்தை ஈர்ப்பவை தான். சுட்டித்தனமாக விளையாடுவதோ, புதுசான உணவுகளை சுவைத்து பார்ப்பதோ என நம்மை சிரிக்க வைக்கும் பல வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன. அப்படித்தான் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், பல குழந்தைகள் முதன்முறையாக எலுமிச்சை சுவைக்கின்றன.
View this post on Instagram
ஆனால், சுவைக்கும் அந்த நொடி… அவர்களின் முகத்தில் வரும் அதிர்ச்சி, புன்னகை, வியப்பு போன்ற முக பாவனைகள் இணையதளத்தில் அனைவரையும் சிரிப்பில் மூழ்கடிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில், ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் எலுமிச்சையை சுவைக்கச் செய்கிறார்கள். சிலர் ஆர்வமாக கடித்து சுவைக்க, உடனே முகம் சுருக்கி, உடம்பே சிலிக்கின்ற அளவிற்கு எதிர்வினை காட்டுகின்றனர்.
மற்றொரு சிலர் அதைப் பிடித்து சுவைக்கவும் செய்கிறார்கள். ஆனால் பலருக்கும், அந்த பழத்தில் உளள புளிப்பு அவர்களை சிலிர்க்க வைத்தது. இது எதுவும் தானாக நடந்ததல்ல, பெற்றோர் திட்டமிட்டு பிள்ளைகளுக்கு சுவைக்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
இந்தக் க்யூட் வீடியோவை funnymms\_official என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டு இருக்கிறது. தற்போது இது 30 லட்சத்திற்கு மேல் பார்வைகள் பெற்றிருப்பதுடன், 1.5 லட்சம் பேர் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்களின் கருத்துக்களில், சிலர் “இந்த வீடியோ பார்த்தாலே நாக்கு புளிக்குது!” என ரசிக்க, சிலர் “இது வேடிக்கையாக தெரியலாம், ஆனா குழந்தைகளின் ருசி உணர்வுகள் நம்மள விட மோசமா பாதிக்கப்படலாம்” என குற்றச்சாட்டுகளும் எழுப்பியுள்ளனர்.
