சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று, சீனாவின் ஆழமான மற்றும் ஆபத்தான சாலையைக் குறித்ததாகும். லிங்க்பாஷி ஜிக்ஜாக் சாலை என அழைக்கப்படும் இந்த சாலை, தெற்குப் மேற்கு சீனாவின் சொங்க்சிங் பகுதியில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கே பீதியூட்டும் வகையில் உள்ள இந்த சாலை, சராசரி டிரைவர்கள் மட்டுமல்ல, அனுபவமிக்க வாகன ஓட்டிகளையும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 453 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த சாலையில் 18 ‘ஹேர் பின்’ மோடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் உயிரைப் பரிக்கக்குடியவை.
453 meters. 18 hairpin turns. Lingpaishi Zigzag Road in SW China’s Chongqing went viral as “drivers’ nightmare.”
But for the 137 residents of Minzhu village, it’s been the road to school, hospital, and hope since 2012. Before it was built, villagers had no choice but to climb… pic.twitter.com/ZAmfO8deQJ
— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) August 20, 2025
இவ்வழி அமைக்கப்படுவதற்கு முன், மின்ழூ என்ற கிராம மக்கள் ஆபத்தான பாறைகளைக் கடந்து சுழல்வழிகளாகப் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்த சாலை கட்டப்பட்ட 2012க்குப் பிறகு, கிராமத்தில் உள்ள 137 குடும்பங்களுக்கு மருத்துவமனை, பள்ளி போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பது சாத்தியமாகியுள்ளது.
இந்த வீடியோவை @SpoxCHN\_MaoNing என்ற X கணக்கு பகிர்ந்துள்ளது. “18 ஹேர் பின் ஜிக்ஜாக், 453 மீட்டர் உயரம் ஒரு டிரைவருக்கான கயிறு மேலே நடக்கும் கனவாக இருக்கலாம், ஆனால் ஒரு கிராமத்திற்கு இது வாழ்க்கையை மாற்றிய வழியாக மாறியுள்ளது” என்ற தலைப்புடன் பகிரப்பட்டது.
