
சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்ட கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்படி, ரமேஷ் என்ற கவியரசனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.