தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 36 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே சென்ற போது சுரேஷின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுரேஷ், சரஸ்வதி, முனீஸ்வரன், காமாட்சி, பிள்ளைத்தாய் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.