தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  சென்னை பொறுத்தவரை ஒரு ஒரு இண்டிகேட்டர்ல தொடர்ச்சியாக கீழே வந்து கீழே வந்து நகரத்திலே வாழ முடியாத அளவுக்கு சென்னை மாற்றி வைத்திருக்கிறார்கள். வருசத்துக்கு வருஷம் தண்ணி வந்துரும் சென்னை  வேண்டாம். இவங்க சரி பண்றது இல்ல.  எலக்சனுக்கு முன்னாடி சொன்னாங்க,  நாங்க 98% மழைநீர் வடிகால் பணிகளை முடித்து விட்டோம் என்று….

இங்கு இருக்கக்கூடிய  நிறைய பேர் 98 சதவீதம் முடிச்சிட்டாங்க இல்ல….  அப்புறம் எதுக்கு அரிசி வாங்கி வைக்கணும் ? அப்புறம் எதுக்கு  பருப்பு வாங்கி வைக்கணும் ? அப்புறம் எதுக்கு காய்கறி வாங்கி வைக்கணும் ? மழை வந்து தண்ணீர் ஒருநாள் நிக்கும், பிறகு வடிஞ்சி போய்டும்ன்னு நினைச்சாங்க. ஆனால் மழை வந்து,

ஒரு வாரம் ஆகியும் தண்ணி வடியாத பிறகுதான்,  அமைச்சர் கே.என் நேரு அவர்கள் சொல்றாங்க இல்லைங்க…. வெறும்  42 சதவீதம் தான் முடிந்திருக்கிறது. இதெல்லாம் தாண்டி சென்னையில் நமக்கு ஒரு மேயர் கிடைத்திருக்கிறார்கள். ஓசூர்ல என் மண்,  என் மக்கள் யாத்திரை 150வது தொகுதில நான் பேசும்போது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொன்னேன்.  அதாவது நம்முடைய அமைச்சரை பார்த்தீங்கன்னா….. மத்தியில் மோடி ஐயா  உட்கார்ந்து இருப்பாங்க.

மோடி ஐயா பக்கத்துல அமித் ஷாஜீ உக்கார்ந்து இருக்காங்க, உள்துறை அமைச்சர். இந்த பக்கம் பாத்தீங்கன்னா……  நம்முடைய ராஜ்நாத் ஜீ ஐயா நம்முடைய பாதுகாப்புத்துறை அமைச்சராக உக்கார்ந்து இருப்பாங்க. இந்த பக்கம் பார்த்தீங்கன்னா…. நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மா  உக்காந்திருக்காங்க…. அந்த  பக்கம்  கொஞ்சம் எட்டி பார்த்தீங்கன்னா, ஜெய்சங்கர் அய்யா நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்காங்க….

இன்னும் கொஞ்சம் எட்டி பார்த்தீர்கள் என்றால் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, ஐடி துறை அமைச்சராக இருக்காங்க… அப்படியே கொஞ்சம் அந்த பக்கம் பார்த்தீங்கன்னா…. பியூஸ் கோயல் அவர்கள் நம்முடைய தொழில்துறை அமைச்சராக அவுங்க இருக்கிறாங்க. நம்முடைய கேபினட்ல 75 பேர் எடுத்துகிட்டீங்கன்னா…. வேலை செய்யக்கூடியவர்கள்….. நம்முடைய ஆட்சியை பொறுத்தவரை அவுங்கதுறையை  அவுங்க பார்ப்பாங்க. அவுங்க துறையில் ஒரு மாற்றத்தை கொடுப்பாங்க.  அதன் மூலமாக

நாடு முன்னேறும். இன்னைக்கு நீங்க டிஎம்கே கேபினட் எடுத்து பாருங்க…. நடுவுல ஸ்டாலின் ஐயா உக்காந்து இருப்பாரு…. இந்த பக்கம் உதயநிதி ஸ்டாலின் உக்காந்து இருப்பாங்க…. இந்த பக்கம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கல்வித்துறை உட்கார்ந்திருப்பாங்க…..  இந்த பக்கம் கே.என் நேயர் உட்கார்ந்து இருக்கார….  இந்த பக்கம் பொன்முடி உட்கார்ந்திருப்பார்…..

இந்த பக்கம் துரைமுருகன்  உட்கார்ந்திருப்பார்….  இந்த பக்கம் கே.கே.எஸ் .எஸ். ஆர். இராமச்சந்திரன் உக்கார்ந்து இருக்காரு. இந்த பக்கம் நம்முடைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உட்கார்ந்திருப்பார். அப்படியே நீங்க பார்த்துகிட்டே போனீங்கன்னா….

வேலை செய்யக்கூடிய தகுதியும்,  திறமையும் இருக்கின்றவர்கள் இருக்கிறார்களா ? இல்லை. குடும்ப ஆட்சியினுடைய மிகப்பெரிய பிரச்சினை என்னன்னா….  அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவரை அறிவாளியாக காட்ட வேண்டும் என்றால்,  அவருக்கு பக்கத்துல உட்காரவங்களை கோமாளிகளாக உட்கார வைத்தீர்களா…  அவர் அறிவாளியா தெரிவார் என பேசினார்.