வியட்நாம் தலைநகர் ஹனோய். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் சம்பவ நாளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதோடு  பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் ‌ உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.