அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு மிசோப்ரோஸ்டால், மைபெப்ரிஸ்டோன் ஆகிய மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விதமான  உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதால் அதற்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மசோதா தாக்கல்  செய்யப்பட்டது.

இந்த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கியதால் அந்த கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் அந்த மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. மேலும் இதை மீறி பயன்படுத்துபவர்களுக்கு 5 வருடங்கள் வரை சிறை  தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.