சிவகாசி அருகே கடன் தொல்லை காரணமாக  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் லிங்கம் (44), அவருடைய மனைவி, மகன், மகள் மற்றும் இரண்டு மாத குழந்தை உட்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் உயிரிழந்த லிங்கத்தின் whatsapp பதிவுகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தபோது சிலர் கடன் தொகையை திருப்பி கேட்டு அனுப்பி இருந்த மெசேஜ்கள் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்களில் சிலர் முக்கிய புள்ளிகளாக இருப்பதாகவும் தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.