மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகின்றார். சென்னையில் இன்று மாலை ஐந்து மணிக்கு கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ராஜ் பவனில் தங்கும் அவர், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை ஜனவரி 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் அங்கிருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கும் செல்கிறார். ஜனவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் புனித நீராடும் அவர் தீர்த்தமும் சேகரிக்க உள்ளார்.