மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தையான ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலையும் தற்போது கைது செய்துள்ளனர்.

அதாவது சிறுவன் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நிலையில் ஓட்டுநரை கட்டாயப்படுத்தி விபத்தை ஒப்புக்கொள்ளுமாறு சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் மிரட்டியுள்ளனர். அதோடு ஓட்டுனரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். தன்னை மிரட்டி காவல் நிலையத்தில் ஆஜராக வைத்ததாக ஓட்டுனர் புகார் கொடுத்ததின் அடிப்படையில் சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.