அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த இயக்கம் இன்னைக்கு எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு எழுந்திருக்கிறது. ஒரு சரியான தலைமை வந்திருக்கிறது. பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இருசக்கர வாகனம் கொடுத்தது ADMK.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,  பாரதியார் பெண் விடுதலைக்காக பாடல்கள் எழுதினார், கவிதைகள் எழுதினார். பெண் விடுதலை வேண்டும், பெண்கள் படிக்க வேண்டும் என தந்தை பெரியார் தன் உயிர் உள்ளவரை இறுதிவரை போராடினார்.

இதனை செய்து காட்டியவர் புரட்சி தலைவி அம்மா. நடைமுறைப்படுத்தியவர் அம்மா. மகளிர் கமாண்டோ படை, மகளிர் காவல் நிலையம், எப்படி அம்மா சிந்திக்குறாங்க பாருங்க ? இரண்டரை வருடம் ஆச்சு என்ன செஞ்ச தமிழ்நாட்டுக்கு ? இந்த முதலமைச்சரை கேட்கிறேன்… என்ன செய்தீர்கள் ? சொன்னதையாவது செய்ய முடியுதா ? எங்க அம்மா புது புது திட்டங்கள்…  பெண்களுக்கு இரண்டு மணி நேரமாக ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக விலை இல்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி கொடுத்தாங்க.

பெண்கள் முன் தூங்கி, பின் எழுகிறவர்கள்.  கணவன்,  பிள்ளைகளை பார்த்து…  அவங்களையெல்லாம் படுக்க வச்சுட்டு,  தூங்கி,  முன்னாடியே எழுந்து பிள்ளைகளுக்கு காபி,  டீ , போட்டுக் கொடுத்துட்டு…  வீட்டுக்காரருக்கு போட்டு கொடுத்துட்டு…  டிபன் செஞ்சு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு…  வீட்டுக்காரர வேலைக்கு அனுப்பி வச்சிட்டு…  மதிய சாப்பாடு செஞ்சு….  பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே சாயங்காலம் பிள்ளைகளுக்கு பலகாரம் செஞ்சு கொடுத்து…

சாயங்காலம் வீட்டுக்காரர் வந்தவுடனே திரும்ப அதே பணி….  இப்படி செய்கின்ற பெண்களுக்கு இரண்டு மணி நேரமாவது ஓய்வு கொடுக்கணும்னு நினைக்கிறேன் நான் என்று சொன்னார்கள்  எங்க அம்மா. எங்க அமைச்சரவையில் நாங்க எல்லாம் உட்கார்ந்து இருக்கும்போது பெருமையாக இருந்தது. அதே மாதிரி தான் அம்மா சொன்னாங்க. இன்னைக்கு  50 சதவீதம் பெண்கள் இட ஒதுக்கீடு அம்மா கொடுத்தாங்க….  நடைமுறைப்படுத்தியவர் நம்முடைய எடப்பாடியார்…

பெண்கள் இன்றைக்கு உள்ளாட்சி தொகுதியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு. இதைத்தான் தந்தை பெரியார்,  பேரறிஞர் அண்ணாவும் நினைத்தார்கள். இங்க பாருங்க அண்ணாவின்  படம் இருக்கு. திமுகவின் போஸ்டர்ல பாருங்க அவங்க குடும்ப படம் தான் இருக்கும். அவங்க கூட்டத்தில் இருக்குமா ? இருக்கவே இருக்காது..அண்ணாவை புதைச்சிட்டாங்க…  புரட்சித்தலைவர் மட்டும் கட்சி தொடங்கலைன்னு வச்சிக்கோங்க  அண்ணா என்ற ஒருவர் இருந்தார் என்பதே மறந்து இருக்கும்…. சண்டாலர்களே மறந்து இருக்கும் என பேசினார்.