நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் நமக்கு. இந்த இரு கட்சிகள் ஆண்டு 55 ஆண்டு காலம். புரட்சியாளர் இமானுவேல் சேகரன் அவர்களை ஏதோ ஒரு ஜாதிக்குள் அடக்க எனக்கு விருப்பம் கிடையாது. ஒரு புரட்சியாளர்… சமூக நீதிக்காக புரட்சி செய்தவர்… இளம் வயதிலேயே தன் உயிரை தியாகம் செய்தவர்… விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்….

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளுக்காக பல மாநாடுகள்,  போராட்டங்கள் நடத்தி 33 வயதிலே…  அவரை நாம் இழந்தோம். அமெரிக்காவிலே அவரைப் போன்ற ஒரு உதாரணம் இருக்கிறது…  மார்ட்டின் லூதர் கிங் என்று அமெரிக்காவிலே கருப்பு இனத்தை சார்ந்தவர். அமெரிக்க வரலாறு பற்றி உங்களுக்கு தெரியும். ஆப்பிரிக்கா  நாட்டில் இருந்து கருப்பு இனத்தவர்களை அடிமைகளாக அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று 300 – 400 ஆண்டுகளாக அவர்களை அடிமைப்படுத்தி…

பிறகு அந்த சமுதாயத்தில் மாட்டின் லூதர் கிங் என்று அவர் பிறந்து… புரட்சிகள் செய்து,  கருப்பு இனத்தவருக்கு உரிமைகளை பெற்று தந்து, அவரும் இளம் வயதில் 39 வயதிலேயே படுகொலை செய்யப்பட்டார்.அமெரிக்காவிலே அவருடைய நோக்கம்… அவருடைய ஆசை…  அமெரிக்காவிலே ஒரு கருப்பு இனத்தை சார்ந்தவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஒரு ஆசை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய ஆசை அமெரிக்காவில் நிறைவேறியது. பராக் ஒபாமா என்ற கருப்பு இனத்தைச் சார்ந்தவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக 8 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்தார். அதேபோன்றுதான் இங்கே தமிழ்நாட்டிலே புரட்சியாளர் இமானுவேல் சேகரனார் அவர்களின் தியாகம்  வீணாகாது.

நிச்சயமாக அவருடைய நோக்கம் சமூகநீதி. சமூக நீதி எப்படி கிடைக்கும் என்றால் ? அரசியல் அதிகாரம் இருந்தால் தான் கிடைக்கும். நம்ம போராடினால் நிச்சயமாக  கிடைக்காது. கூட்டம் நடத்தினால்  நிச்சியம் கிடைக்காது. மாநாடு நடத்தினால்  நிச்சயம் கிடைக்காது.  காரணம் 55 ஆண்டு காலம் இரு கட்சிகள் ஆட்சி செய்து,  கொடுக்காத சமூகநீதி. இனி இவர்கள் கொடுக்கப் போகிறார்களா?  நமக்கு கிடைக்குமா ? கொடுக்கின்ற சூழலில் அவர்கள் இருக்கின்றார்களா ?  பெறுகின்ற மன நிலையில் நாம் இருக்கின்றோமா ? அதற்கு ஒரே வழி ஆட்சி அதிகாரம் என தெரிவித்தார்.