கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உள் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் 6ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறி இருக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.