ஒரு சிறுவனின் செயல் மனிதத் தன்மைக்கு உதாரணமாக மாறியுள்ளது,” என சமூக வலைதளங்கள் பாராட்டிக்கொண்டு இருக்கின்றன. மிசோராமை சேர்ந்த 6 வயது சிறுவன் டெரிக் சி லால்சென்பிமா, தன்னுடைய சைக்கிளில் செல்லும் போது பக்கத்து வீட்டுக்காரர் கோழிக் குஞ்சியை தவறுதலாக மிதித்து விடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by FamousPulse (@famous.pulse)

ஆனால் அதன்பின் அவர் செய்த செயல் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. கோழிக் குஞ்சிக்கு ஏற்பட்ட காயம் பார்த்ததும், அதனை இழந்துவிட்டு போகாமல், அதற்காக மனம் கலங்கிய சிறுவன், அதை அன்புடன் தூக்கி அருகிலுள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு சென்று விட்டான்.

அதிகம் பேச முடியாத அவன், சும்மா சின்னஞ்சிறு பையில் வைத்திருந்த 10 ரூபாய் நோட்டுடன் மருத்துவமனையில் நின்று, “இந்த பணத்தில் அதை குணப்படுத்த முடியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

இப்போது, ஒரு பக்கத்தில் காயமுற்ற கோழிக் குஞ்சி, மறுபக்கத்தில் சிறுவனின் முகத்தில் அக்கறை நிறைந்த பார்வையுடன், 10 ரூபாய் நோட்டை பிடித்துக் கொண்டிருக்கும் டெரிக்கின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நூற்றுக்கணக்கானோர் அவரது மனிதநேயத்தை பாராட்டி “இவனது இதயத்தை போல் உலகமும் இருந்திருந்தால் போதும்” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர். நம்மை வெட்கப்பட வைக்கும் இந்தச் சிறுவன் உண்மையில் நம் அனைவருக்கும் ஓர் பாடமாகவே இருக்கிறார்.