DMK சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய நூற்றாண்டு விழா எனக்கும், அவருக்கும் இருந்த தொடர்பு சொன்னா…. நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். நான் முதல் முதலில் நடித்த படம் அமைச்சரவர்கள் சொன்னது போல சட்டம் என் கையில் 1978 இல்ல வந்த படம். அதுல தான் ஒரு சின்ன வில்லன் கேரக்டர்ல நடிச்சேன்… அந்த படத்தின் 100 வது நாள் விழா சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.
அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் தான் தலைமை தாங்கினாங்க. நான் வில்லனாக முதல் முதலில் கேடயம் வாங்குனது கலைஞர் அவர்களுடைய கையில் தான்…. அதன் பிறகு நான் சாவி என்ற ஒரு படத்தில் முதல் முதல் கதாநாயகனாக நடித்தேன். அதற்கு அப்புறம் கடலோர கவிதைகள் என பாரதி ராஜா டைரக்ஷன்ல நடிச்ச அந்த படம் 25 வாரம் ஓடுச்சு.
இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால், அந்த படத்திற்கு விழா வைக்கல. அதற்கு அப்புறம் கலைஞருடைய கதை வசனத்தில்… என்னுடைய அன்பு நண்பன் மணிவண்ணன் இயக்கத்தில் பாலைவன ரோஜாக்கள் என ஒரு படத்தில் நடிச்சேன். அதுல நான் தான் கதாநாயகன். கதாநாயகனாகவும் முதல் முதலில் கேடயம் வாங்கினது கலைஞருடைய கையில்தான். அதற்கு அப்புறம் மண்ணின் மைந்தன் அப்படி என்ற படத்தில் கலைஞரின் வசனத்தில் நடிச்சேன்.
இப்படி தொடர்ந்து சொல்லிக்கிட்டே போகலாம்…. அப்போ பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடிக்கிற காலத்தில் இருந்து இன்றைய தமிழ்நாடு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய பழக்கம்… நல்ல பழக்கம்…. அவர் மாதிரி ஒரு கடுமையான உழைப்பாளியை பார்க்கவே முடியாதுங்க.. அந்த உழைப்பாளிக்கு தான்… அப்படிப்பட்ட ஒரு உழைப்பாளி…. ஒரு சிறந்த தொழிலாளியாக தான் இருக்க முடியும்.
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மை தொழிலாளி. அப்படின்னு சொல்லணும்…. ஏன்னா அந்த அளவிற்கு அவர் மக்கள் சிந்தனையாகவே இருக்கிறார்… அதனால் தான் இப்படிப்பட்ட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் போன்ற கடுமையான உழைப்பாளிகளை தேர்வு செய்து, ஒரு மிகப்பெரிய ஒரு படையை தனக்கு பின்னால் திரட்டி இருக்கிறார்.
