சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  முதலமைச்சர் எல்லாம் சொல்வதோடு சரி,  எங்க செஞ்சாரு….  உங்க ஊடகத்திலும்,  பத்திரிகைகளும் பார்த்த செய்தியை வச்சு தான் நான் சொல்றேன். நாங்க எல்லாம் போய் எந்த செய்தியும் சொல்லல…..  ஊடக நண்பர்களும்,  பத்திரிக்கை நண்பர்களும்…..  நீங்கள் காட்டுகின்ற காட்சியை வைத்து தான் இன்று வரைக்கும் நான் பேசிட்டு இருக்கேன்..

இன்றைக்கு சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது…. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், சென்னை ஒட்டியுள்ள நகர மாவட்டம் இன்றைக்கு வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எல்லா தொலைக்காட்சியும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இன்றைய முதலமைச்சர்,  வேண்டும் என்றே  திட்டமிட்டு…. ஒரு தவறான செய்தியை சொல்லிக் கொண்டிருக்கிறார்…

அதோடு நான் வரும்போதுகூட தொலைக்காட்சி பார்க்கும்போது…..  75 சதவீத பகுதிகளில் இன்னைக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாக  சொல்கிறார்.. இதெல்லாம்  பச்ச பொய் எங்கே 75% மின்சாரம் கொடுத்துள்ளீர்கள்… எதோ ஒரு சில இடத்துல மின்சாரம் வந்து இருக்கு… ஆக  உடனடியாக மக்கள் பாதிபுக்குள்ளான மக்களுக்கு மின்சாரத்தை கொடுக்க வேண்டும்.

நாங்க ஆட்சியில் இருக்கும் போது எப்படி எல்லாம் பேசினாங்க?  எப்படி எல்லாம் உங்க ஊடகத்துல வந்தது ? அதை மாத்தி மாத்தி காட்டுனீங்க….  இப்போ காட்டவே மாட்டேங்கிறீங்க… என்னன்னு தெரியல…   அதிமுக ஆட்சியில் வெள்ளை காடா காட்சி அளிக்கிறது. நகரமே தத்தளிக்குது….  குடிப்பதற்கு தண்ணீர் இல்ல….  மருந்து வாங்குவதற்கு மக்கள் போக முடியல….  வீட்டை விட்டு வெளியே போக முடியல… நீதிதான் போறாங்க…  அப்படியெல்லாம் கட்டினீங்க…..

இப்ப எப்படி போட்டு இருக்கீங்க ? இப்ப காட்டினீங்களா ? பரவால்ல…..  என்ன சொன்னாங்க ?  4000 கோடி செலவு செய்து வடிகால் வசதி செய்திருக்கிறோம்…  மழை பெய்தால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காதுன்னு சொன்னாங்க…  இப்ப எவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது ? எங்க பார்த்தாலும் கழுத்தளவு தண்ணி தேங்கி இருக்குது…  மக்கள் வெளியில வர முடியல…  அதைத்தான் மக்கள் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.