திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி உயரத்தில் ரோகித் வெல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ரோகித் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோகித் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.