சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம் அருகே எல் சி 55 கேட் பகுதியில் சென்றபோது பொதுப்பெட்டியின் சக்கரத்தில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் கேட் கீப்பர் உடனடியாக லத்தேரி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சுமார் 4 மணிக்கு ரயில் ரத்தேரி ரயில் நிலையம் யார்டில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் கீழே இறங்கினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்ததில் வண்டியின் பிரேக்கில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. அந்த பழுது சரி செய்யப்பட்டு 4.17 மணிக்கு ரயில் மங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் சிரமப்பட்டனர்.