திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்…..   உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்…..  அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்….  தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்,  மாண்புமிகு முதல்வரின் உடைய வழிகாட்டுதலின்படி சிறப்பாக பணியாற்றுகின்றார்கள்.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்று சொன்னால் ? மத்திய புலனாய்வு அமைப்பான  அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அந்த மத்திய அரசினுடைய நிறுவனங்கள்…. மத்திய அரசினுடைய மனநிலையை தெரிந்து கொண்டு…..  பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அல்லாத மாநிலங்களில் இருக்கின்ற அரசியல்வாதிகள்,  தொழிலதிபர்கள் அவர்களையெல்லாம் குறிவைத்து….

அவர்களுக்கு முதலில் நூல் விடுவது ? எப்படி நூல் விடுவாங்க என்றால் ? உங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கு….. பிரச்சனை இருக்கு….. எனக்கு வேண்டிய ஆளு  நான் அவர்களை சமாதானம் படுத்தி வைத்திருக்கேன்…  உங்களுக்கு எந்த பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்…  அப்படின்னு சொல்லி சொல்லி…. ஒவ்வொன்னா பேசி அவர்களுக்கு இடைத் தரகர்களாக  பல பேர் வச்சிருக்காங்க….  இந்த மூன்று நிறுவனங்களுக்கும். குறிப்பாக இன்றைக்கு அமலாகத்துறை சேர்ந்தவர்கள் தான் இதிலே அதிகமாக இடைதரகர்கள் வைத்துள்ளார்கள்.

இடைத் தரகர்கள் மிரட்டுவது…. அப்படியே பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிறது…..  அதைத்தான் இப்பொழுது நாங்கள் பத்திரிக்கை,  ஊடகங்களில் பார்த்ததிலிருந்து அப்படி பண்ணி இருக்காங்க….  இதுபோல் எல்லோருக்கும் அன்பான பேசுறது…..  அதற்கு பிறகு சற்று அந்த டோன் உயர்த்தி பேசுறது… மிரட்டல் கொடுக்கிறது… அதை தாண்டி அடுத்த கட்டம் சமாதானமா பேசி வாங்குறது…..  இதெல்லாம் அவர்கள் பணிய வில்லை என்று சொன்னால்  அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது…..

இப்படிப்பட்ட செயல் தான் அதிகமாக நடப்பதாக  பல பேர் சொல்கிறார்கள்…  எனக்கு அது வேடிக்கையாக இருக்கிறது…..  என்கிட்ட கூட கடந்த மூன்று மாதமாக ஒரு சிலர் பேசிக்கொண்டே இருந்தாங்க… அப்படியாங்கு….. இப்படியாங்கு என்று….  நான் அதை எல்லாம் காது கொடுத்து கேட்பது இல்லை. ஒரு முறை… இரண்டு முறை…. மூன்றாவது முறை வரும்போது சொன்னேன்…

தம்பி  என்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம். நான் சரியா இருக்கேன்.  மேல இருக்கிறவரு பார்த்துப்பாரு…  என்ன இருந்தாலும்,  நான் பாத்துக்குவேன்…  நீங்க அத பத்தி ஒன்னும் இல்ல…. நான் விவசாயம் பண்ணி தான் பண்ணுறேன்…  வேற தொழிலே இல்லை….  என்கிட்டயே நீ மிரட்டுறனா…. இதுதான் அப்ப எல்லாருக்கும் பண்ணுவியா ? அப்படின்னு அனுபவபூர்வமாக தெரிந்து,  நான் இதை சொல்றேன் என தெரிவித்தார்.