தமிழகத்தில் வரைவு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 14,18,325 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது வரைவு வாக்காளர் திருத்த பணிகளுக்கு பிறகு 12,03,368 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் நயினார் நாகேந்திரனின் நெல்லை தொகுதியில் மட்டும் 42,119 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.