
மாநில அரசுகளின் உட்கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றைக்காக தமிழகத்திற்கு 2976 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு வரிகளில் பங்கு ஒவ்வொரு மாதமும் மாத தவணையாக வழங்கப்படுகிறது. இந்த மாதம் 11ஆம் தேதி அன்று ஏற்கனவே ஒரு தவணையாக 72961 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருந்தது. அடுத்த தவணை ஜனவரி மாதம் 19ஆம் தேதி விடுவிக்கப்படும். அன்று 72,961 கோடி ரூபாய் விடுவிக்கப்படும். இதற்கிடையே தற்போது வருட இறுதி, பல்வேறு கொண்டாட்டங்கள் இருக்கின்றன. இதை தவிர புது வருடம் பிறக்கிறது.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாடப்படுகின்றன. இது தவிர பல்வேறு நல்வாழ்வு திட்டங்களுக்கும் மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் கூடுதலாக ஒரு தவணை வரி பங்கை விடுவிக்க முடிவு செய்து இருக்கிறது.
ஆகவே தான் இந்த டிசம்பர் மாதத்திலேயே இரண்டாவது முறையாக 72,961 கோடி ரூபாய் விடுவிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. தமிழகத்திற்கு இதிலே பங்கு 2976 கோடி ரூபாய். இதுதான் ஒவ்வொரு மாதம் கிட்டும் தவணை. ஆகவே ஏற்கனவே டிசம்பர் 11ஆம் தேதி அன்று இதே அளவு 2976 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் ஒருமுறை அதே தொகை விடுவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஜனவரி மாதம் 10 ஆம் தேதி மீண்டும் 2976 கோடி ரூபாய் விடுவிக்கப்படும். ஆகவே மாநில அரசுகளுக்கு ஒரு தவணை வரி பங்கை முன் பணமாக மத்திய அரசு அளித்து இருக்கிறது. இது மாநில அரசுகளின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகரமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் நம்புகின்றது.