போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சற்றுமுன் தொடங்கியது. தொழிலாளர் நல ஆணையத்தில் முன்னிலையில் நடந்துவரும் இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்வதை எதிர்த்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டிஸ் அனுப்பி இருந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.