செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில், திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான எம்பி கனிமொழி அவர்களுக்கு “பெரியார் விருது” வழங்கப்பட இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கியமான தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

மேலும், இந்த விழாவில் எழுத்தாளர் சுப.சீதாராமனுக்கு ‘அண்ணா விருது’, கலைஞர் விருது சோ.மா.இராமசந்திரனுக்கு வழங்கப்படும். பாலவேந்தர் விருது – சிராஜமன் (குளித்தலை), பேராசிரியர் விருது – மருத்துவர் ராமலிங்கம் (பேராசிரியர்), பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.