சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரை அறிவிப்பை அடுத்து போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என போராட்டங்கள் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அறிவித்துள்ளார்.

இதனால் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்று வந்த இடைநிலைப் போராட்டம் தற்போது முடிவுக்கு வருகிறது. இந்த போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அடுத்தடுத்த கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து, தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் இதுகுறித்து குழு அமைக்க உத்தரவிடுவதாக காலையில் தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்று தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்ட குழு முடிவு செய்துள்ளது.