முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு. 5 காசு உயர்ந்து 5 ரூபாய் 55 காசுக்கு விற்பனை ஆகிறது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முட்டை பண்ணை கொள்முதல் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது.