ரேஸ் கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடைபயிற்சிக்கு வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ் கோர்ஸ் நடைபாதையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு 40 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

தற்போது அந்த நிதியினை கொண்டு ஜெர்மன் தொழில் நுட்ப உதவியுடன் நவீன மழை நீர் கட்டமைப்பு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் ஒரு கிலோ மீட்டர் பாலம் தோன்றியும் அதன் மேல் துவாரம் இருக்கும் பிளாஸ்டிக் கூண்டு வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் மேல் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு மண் கொண்டு மூடப்பட்டிருக்கின்றது. தற்போது 8.5 மீட்டர் அகலம் 7.5 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி  நடந்து வருகின்றது என அதிகாரி தெரிவித்துள்ளார்.