தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து ‘டிட்வா’ (Titwa) புயலாக மாறியுள்ளது.
இந்தப் புயல் சென்னையில் இருந்து தெற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதுடன், மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ‘டிட்வா’ புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
நாளை (நவ. 29) பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே முடிவு எடுத்து அறிவிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
