அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார்.

“தமிழகத்தை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய் தான்; விஜய் முதல்-அமைச்சராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய செங்கோட்டையன், “காலங்கள் கனிந்து வருகிறது; டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“நம்முடன் இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்” என்றும் அவர் சூசகமாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவைப் போலவே, தானும் விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று கூறிய செங்கோட்டையன், “எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா?” என்றும் கேள்வி எழுப்பினார்.