நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை மட்டும் இருக்கக்கூடிய சூழலில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளை தற்போது இறுதி செய்தி வருகிறது.   தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தை பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைப்பதற்கு முயற்சிக்காட்டி வருகிறது.

இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசி இருக்கிறார்.  இந்த சந்திப்பின்போது ஜி.கே வாசன் மூலம் அதிமுகவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக அகில இந்திய தலைமை முனைப்பு காட்டி வருகிறது.

இதனை தொடர்ந்து தான் நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்  சென்னையில் இருக்கக்கூடிய இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் நேரடியாக சந்தித்து, ஜேபி நட்டா தெரிவித்த கருத்துக்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைய வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் இணையாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த முயற்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக  பாமகவின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பதற்கு ஜி.கே வாசன் அடுத்த கட்டமாக முடிவு செய்திருக்கிறார்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ADMK இணைய மாட்டோம் என்று இன்றும்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை திமுகவுக்கு மாற்றாக அமைப்பதற்கு பாஜகவுக்கு மீண்டும் அதிமுக  தேவைப்படுகிறது. அதனால்  இறுதி கட்ட முறையில் பாஜக ஈடுபட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.