உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த நான்கு ஆண்டுகளில் பெறப்பட்ட 1.5 கோடி கோரிக்கை மனுக்களில் 1.1 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி கொடுக்க உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்ட திட்டத்தில் இணைக்கப்படுவர்.
