எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு – உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனக்கூறி வழக்கறிஞர் சூரியமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்கனவே சென்னை உரியையியல் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் இந்த உத்தரவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக தொடர்ந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தற்போது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் நீதிமன்றங்களின் இந்த உத்தரவினால் அவரது பொதுச்செயலாளர் பதவிக்கு ஏதாவது சிக்கல் வரலாம் என்றும் கூறப்படுகிறது. இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
