தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக எக்ஸ் வலைதளத்தில் TVK-வை சேர்ந்த பிரியா என்பவர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மாநாடு அறிவிக்கப்படுவதற்கு முன் வரை அந்த பகுதியில் உள்ள சாலைகள் நல்ல நிலையில் இருந்ததாகவும், ஆனால் மாநாடு அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில் இரவோடு இரவாக சாலைகள் தோண்டப்பட்டு, பால வேலை நடப்பதாக காரணம் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாநாட்டிற்கு வரும் மக்களுக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும் மாநாட்டிற்கு தேவையான நாற்காலிகளுக்காக ஐந்து காண்ட்ராக்டர்களிடம் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் நான்கு ஒப்பந்தங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதனால் கேரள அரசின் ஆதரவுடன் அங்கிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் “75 வருட பாரம்பரிய கட்சின்னு சொல்றீங்க அப்புறம் எதுக்குடா இப்படி பயந்து பீதியில் பேதியாகுறீங்க ? இந்த தடையெல்லாம் மீறி சரித்திரம் படைக்கும் தவெக மதுரை மாநாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.
75 வருட பாரம்பரிய கட்சின்னு சொல்றீங்க அப்புறம் எதுக்குடா இப்படி பயந்து பீதியில பேதி ஆகுறீங்க😂 @arivalayam @DMKITwing
இந்த தடையெல்லாம் மீறி சரித்திரம் படைக்கும் தவெக மதுரை மாநாடு🔥 @TVKVijayHQ#TVKMaduraiMaanadu #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/njQ8uiJDwf— priya (@PriyankaSmile01) August 20, 2025
