மதுரை அருகே பாரபத்தியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், தவெக தொண்டர்கள் “சீமான் ஒழிக” என முழக்கமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விழா ஆரம்பிக்கவும், முக்கிய நிகழ்வுகள் நடைபெறவும் இருந்த வேளையில், சில தொண்டர்கள் அந்த முழக்கத்தை எழுப்பினர்.

தலைவர் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமான கட்டமாகும் இந்த மாநாட்டில், அவரது வலிமையும் மக்கள் ஆதரவும் அதிகரித்து வருவதை இந்த கூட்டம் எடுத்துக்காட்டுகிறது. பெரும் உற்சாகத்துடன் நள்ளிரவு முதலே மக்கள் குவிந்ததால், விழாவை ஆரம்பமாக இருந்த 4 மணிக்கு முன்னதாகவே நடத்த விஜய் தீர்மானித்ததாக கூறப்படுகிறது. மதியம் 3 மணிக்கே விஜய் திடலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், முழுக்க முழுக்க விஜயின் பேரழகான அரசியல் வரவேற்பு விழாவாகவே இந்நிகழ்வு மாறியிருக்கிறது.

“>