ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார். அதன் பின்பு அரக்கோணம் காந்தி சாலையில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காகவும் உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். மு க ஸ்டாலின் அறிவிப்பு மட்டும்தான் வெளியிடுவார். போட்டோ சூட் எடுப்பார். மக்களை ஏமாற்றுவதில் திமுக சாதனை படைத்துள்ளது. திமுக தனது குடும்பத்துக்காக மட்டும் பாடுபடும் இயக்கம். ஆனால் அதிமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம்.
இதுதான் 2 கட்சிக்கும் உள்ள வித்தியாசம். ஜெயலலிதா மறைந்த பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித்திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து போராடுகிறார்கள். அதையும் முறியடித்தோம். திமுகவின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடு பொடி ஆக்குவோம். இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்கி இருப்பவரும், அதிமுக தலைவரை போற்றி தான் கட்சி தொடங்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்துள்ளார்கள். வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தர வேண்டும் என்று கூறினார்.
