தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.