வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூபாய் 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 4 மாவட்டங்களில் வீடுகளை இழந்தோருக்கு ரூபாய் 10,000 நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சேதமடைந்த விலை நிலங்களுக்கு ஹெக்டருக்கு ரூபாய் 17,000 நிவாரணம் வழங்கப்படும். அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 6000 வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேசமயம் நெல்லை, தூத்துக்குடியில் லேசான பாதிப்புக்குள்ளான வட்டங்களில் உள்ளவர்களுக்கு ₹ 1000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
