மிச்சாங் புயல் மற்றும் கனமழையின் சமீபத்திய தாக்கம் காய்கறி உற்பத்தியை கணிசமாக பாதித்துள்ளது, குறிப்பாக கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய் மற்றும் பச்சை காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருவதை வெகுவாக பாதித்துள்ளது.  இதனால் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரத்து உள்ள வெங்காயத்தில் 50 சதவீதம் மட்டுமே வருவதால், பெரிய வெங்காயத்தின் விலை ரூ.50க்கு மேல் உயர்ந்து,

சில்லறை கடைகளில் கிலோ ரூ.65க்கு விற்பனையாகிறது என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சீரற்ற காலநிலை காரணமாக பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது. புயல் மற்றும் மழையால் ஆந்திரா பகுதியில் இருந்து வரத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.