விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறும்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கடுமையான தீக்காயம் அடைந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
