சென்னையில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகச் சரிந்து தங்கம் வாங்குவோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,560 வரை குறைந்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,00,000-க்கு கீழ் இறங்கியுள்ளதால், இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், இந்த திடீர் விலை வீழ்ச்சி நகைக்கடைகளில் கூட்டத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஓரளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளதால், நகைப் பிரியர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.