அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நீதிமன்றத்தில் ஒரு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் அதிமுக தரப்பில் டிடிவி தினகரனுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த இரண்டு முக்கிய வழக்குகள் தற்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த வழக்குகளில், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக தரப்பினர் இடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்தத் தற்காலிகச் சமரசத்தின் அடிப்படையில், இரு தரப்பும் ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பது டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.