சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற  கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வக்கீல் ஒருவரின் ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதாக கூறப்படும் நிலையில் அந்தப் பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோபத்தில் அவரின் ஸ்கூட்டரை கீழே தள்ளி சேதப்படுத்தினர். அதாவது வழக்கறிஞர் திருமாவளவனின் ஓட்டுநரிடம்ஆவேசம் அடைந்ததால் அந்த பகுதியில் இருந்த விசிகவினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதோடு அந்த வழக்கறிஞரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தின் போது திருமாவளவன் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.