தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் சனாதனம் குறித்து பேசியதால் அவரது கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டல் விடுக்கும் விதமாக துணை நடிகர் ரவிச்சந்திரன் பேசினார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இதன் காரணமாக நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனுவில் எந்தவிதமான உள்நோக்கு காரணத்துடனும் தான் அவ்வாறு பேசவில்லை என்பதால் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது போலீசார் பதிலளிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.