வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.. பட்டாசு கடை தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் 3பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.