வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி போலீசார் குறிப்பிட்டதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, வங்காள மொழியை வங்கதேசத்தின் மொழி என டெல்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது நம் தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடியான அவமானம்.
இது தற்செயல் பிழையோ, தவறோ அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறை மதிப்பீடு செய்யும் ஒரு ஆட்சியின் இரண்ட மன நிலையை காட்டுகிறது. ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இது போன்ற தாக்குதலை எதிர்கொண்டு மேற்குவங்க மக்களுக்கும் அம்மொழிக்கும் மம்தா பானர்ஜி கேடயமாக நிற்கிறார் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
The Delhi Police, under the Union Home Ministry, has described Bengali as a “Bangladeshi language.” This is a direct insult to the very language in which our National Anthem was written.
Such statements are not inadvertent errors or slips. They expose the dark mindset of a… https://t.co/YrF8qGgCOo
— M.K.Stalin (@mkstalin) August 4, 2025
